Newsஇலவச உணவு பொருட்களை வாங்க குவிந்த மக்கள் - கூட்ட நெரிசலில்...

இலவச உணவு பொருட்களை வாங்க குவிந்த மக்கள் – கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

-

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. 

பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைக்கப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் கராச்சி மாகாணம் சிந்து பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச மானிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. 

அந்த மானியம் பொருட்களை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் உட்பட பலர் மயக்கமடைந்து சுருண்டு விழுந்தனர். மயங்கி விழுந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

ஆனால், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இலவச மானிய பொருட்கள் விநியோகம் செய்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...