Newsஉலகில் ஆறு ஆண்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிப்பு என அதிர்ச்சி தகவல்

உலகில் ஆறு ஆண்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிப்பு என அதிர்ச்சி தகவல்

-

உலகளவில் ஆறு பேரில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை தொடர்பான பிரச்சனைகள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய சுகாதார அமைப்பு கருவுறுதல் பராமரிப்புக்கான அணுகல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பங்கேற்றுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘உலகளவில் ஆறு பேரில் ஒருவர் குழந்தை பெற இயலாமையால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பாதிக்கப்படுகின்றனர்.

உலகளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 17.5 சதவீதம் பேர் மலட்டுத்தன்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணக்கார நாடுகளில் 17.8 சதவீதம் பேரும், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் 16.5 சதவீதம் பேரும் குழந்தை பெற இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சனையானது உலகளவிலான மிகப்பெரிய சுகாதார துறை சவாலாக மாறியுள்ளது.

பல நாடுகளின் தரவுகள் இல்லாததால், முழுமையான விபரங்கள் கிடைக்கவில்லை.

எனவே இனப்பெருக்க சுகாதார கொள்கைகள், சேவைகள் மற்றும் நிதியுதவி போன்றவற்றை குழந்தையின்மை சிகிச்சையில் சேர்க்க வேண்டும்’ என்று கூறினார்.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...