குற்றச் செயல்களுக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்தும் விக்டோரியா மாநில அரசின் முடிவிற்கு பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் குற்றச்செயல்களும், அதற்கு பயன்படுத்தப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விக்டோரியாவில் குற்றச் செயல்களுக்கான குறைந்தபட்ச வயதை 10லிருந்து 12 ஆகவும், 2027ஆம் ஆண்டுக்குள் 14 ஆக உயர்த்தவும் மாநில அரசு நேற்று முடிவு செய்தது.
சர்வதேச நிலைமைக்கு கொண்டு வருகின்றது என்பது பலரது நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும் சிறார்களினால் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் இது நல்லதொரு நிலைமையல்ல.
கடந்த ஆண்டு, விக்டோரியா காவல்துறை பதிவேடுகளில் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் 5,882 குற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.