பெடரல் ரிசர்வ் வங்கியின் மதிப்பு அதிகரிப்புக்கு இணையாக வட்டி விகிதங்களை அதிகரிக்க காமன்வெல்த் வங்கியும் முடிவு செய்துள்ளது.
அதன்படி அவுஸ்திரேலியாவில் உள்ள 04 முக்கிய வங்கிகள் இன்னும் சில தினங்களில் வீட்டுக்கடன் உள்ளிட்ட வட்டி விகிதங்களை 0.25 வீதம் அதிகரிக்கவுள்ளன.
இதேவேளை, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 06 மாதங்களில் NAB வங்கி 4.07 பில்லியன் டொலர் பண வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.
முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீத வருவாய் வளர்ச்சி என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், NAB வங்கியின் மூலம் அடமானக் கடன்களைப் பெற்றவர்களில் 1/5 பேர் திருப்பிச் செலுத்த முடியாமல் கடும் நெருக்கடியில் இருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று காட்டுகிறது.





