கனடாவின் மேற்கு பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெப்பநிலை அதிகரித்ததால் காட்டு தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் மேற்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகள் வறண்டுள்ளது.
அல்பெர்டா (Alberta) மாநிலத்தின் 70க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் காட்டுத் தீ பரவியுள்ளது எனவும், சில இடங்களில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 13,000 பேர் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி தமிழன்