இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக சிட்னி சென்றடைந்துள்ளார்.
அடுத்த 02 நாட்களில், அவருக்கும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களுக்கும் இடையில் பாதுகாப்பு – வர்த்தகம் – புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகள் தொடர்பான இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக இன்று இரவு சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தினர் மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
பிரதமர் அல்பானீஸ் அவர்களும் கலந்து கொள்வார் என்றும், இந்திய சமூகத்தைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் வருகை தராததால் நாளை தொடங்கவிருந்த குவாட் தலைவர்கள் மாநாடு ரத்து செய்யப்பட்டது.
ஆனால், அப்போது திட்டமிட்டபடி சிட்னிக்கு வருவேன் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.