Newsமோசடிக்காரர்களை பிடிப்பதற்கு உதவுவதாக நினைத்து அவர்களிடமே $5 லட்சம் இழந்த மூதாட்டி

மோசடிக்காரர்களை பிடிப்பதற்கு உதவுவதாக நினைத்து அவர்களிடமே $5 லட்சம் இழந்த மூதாட்டி

-

91 வயதான மூதாட்டி ஒருவர் மோசடிக்காரர்களை பிடிப்பதற்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு, அவர்களிடமே 5 லட்சம் டொலர்களை இழந்த சோகக்கதை இது.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கணவன் இன்றி வாழ்ந்துவந்த 91 வயது மார்கரெட்டிடம் வாழ்நாள் சேமிப்பாக 5 லட்சம் டொலர்கள் அவர் வசம் இருந்திருக்கிறது.

ஒரு நாள் இணையமோசடியில் ஈடுபடும் நபர் மார்கரெட்டைத் தொடர்புகொண்டு தனது பெயர் ஆண்ட்ரூ வில்லியம் என்றும், மோசடிக்கார்களைக் கண்டறிய ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறையுடன் இணைந்து தான் பணியாற்றி வருவதாகவும் கூறியிருக்கிறார்.

காவல்துறை அதிகாரிபோல் வேடம் அணிந்த அந்நபர், மார்கரெட்டின் பணத்தை யாரோ திருட முயற்சிப்பதாகவும், அவர் தனது பணத்தை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

ஒரு பாதுகாப்பான வங்கியில் பணத்தை வைக்குமாறும், இதன்மூலம் காவல்துறையினரால் இணையத்திருடர்களைக் கண்காணிக்க முடியும் எனவும் மார்கரெட்டிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ இதைச் சொல்ல வேண்டாம் என்றும் அது காவல்துறையினரின் இரகசிய நடவடிக்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் மார்கரெட்டை ஏமாற்றிய நபர் அவரை நம்பவைத்திருக்கிறார்

மோசடி செய்பவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவுவதாக நினைத்த மார்கரெட் சுமார் 10 மாத இடைவெளியில் தன்னிடமிருந்த கிட்டத்தட்ட அரை மில்லியன் டொலர்களை வெவ்வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றியிருக்கிறார்.

மார்கரெட் தனது புதிய கணக்கு ஒன்றில் இருந்து பணம் எடுக்க முயன்றபோது அது ஒரு மோசடி என்பதை உணர்ந்தார். தான் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருப்பது தெரியவந்தபோது அரை மில்லியன் டொலர்களை அவர் இழந்துவிட்டார்.

ஏனையோருக்கு விழிப்புணர்வூட்டும்வகையில் தனது இக்கதையை மார்கரெட் A Current Affair-இடம் பகிர்ந்திருந்தார்.

Latest news

Air Vanuatu நெருக்கடியால் தவித்து வரும் ஆஸ்திரேலிய பயணிகள் 

எர்ன்ஸ்ட் அண்ட் யங் தேசிய விமான நிறுவனமான ஏர் வனுவாடுவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா மற்றும் வனுவாட்டுவில் பயணிகள் இன்னும் சிக்கித் தவித்து வருவதாகவும், இடைநிறுத்தப்பட்ட...

பாலஸ்தீனம் பற்றிய விவாதத்தில் ஆஸ்திரேலியா

பாலஸ்தீனம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பு குறித்து அவுஸ்திரேலியா இன்னும் கலந்துரையாடி வருவதாக வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில்...

உக்ரைன்-ரஷ்யா போரில் 08 இலங்கையர்கள் உயிரிழப்பு

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் இலங்கையின் 8 போர்வீரர்கள் உயிரிழந்துள்ளதாக விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த போர்வீரர்களில் ஆறு பேர் ரஷ்யாவிலும் இருவர்...

இரண்டு உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை

இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் இரண்டு உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மருந்து பயன் திட்டம் தொடர்பான இரண்டு மருந்துகளின் விலை அரசால் குறைக்கப்பட்டுள்ளது. விலைக்...

அவுஸ்திரேலியாவின் பெண்கள் தலைமை தாங்கும் தொழிற்துறைகளில் ஊதிய உயர்வு

அவுஸ்திரேலியாவின் பெண்கள் தலைமை தாங்கும் தொழிற்துறைகளில் 9 வீத ஊதிய உயர்வுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய தொழிற்சங்கம் பெண் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் ஒன்பது சதவீத...

சிட்னி மற்றும் பிரிஸ்பேன் விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு அறிவிப்பு

ஏர் வனுவாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அந்த விமானங்களில் இருக்கைகளை முன்பதிவு செய்துள்ள பயணிகள் இன்றும் நாளையும் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என பிரிஸ்பேன்...