Newsஇறுதி அஞ்சலியின் போது திடீரென விழித்தெழுந்த நபர்

இறுதி அஞ்சலியின் போது திடீரென விழித்தெழுந்த நபர்

-

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இறந்ததாக நினைத்த நபர் இறுதிச்சடங்கு செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியைச் சேர்ந்தவர் ஜீது பிரஜாபதி கடந்த 30 ஆம் திகதி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அவர்

உயிரிழந்ததாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நினைத்தனர்.

அவருக்கு இறுதிச்சடங்கு செய்து, தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மாலை போட்டு அஞ்சலி செலுத்தியபோது திடீரென அவர் கண்விழித்துள்ளார்.

இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். சுற்றியிருந்தவர்கள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டனர்.

உடனே மருத்துவருக்கு தகவல் வழங்கப்பட்டு வரவழைக்கப்பட்டார். அவர் வந்து மாலையும் கழுத்துமாக அசைவற்று கிடந்த ஜீது பிரஜாபதியை பரிசோதனை செய்துபார்த்தபோது உயிர் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த நபரை சிகிச்சைக்காக குவாலியரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நன்றி தமிழன்

Latest news

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

ஆஸ்திரேலியாவில் இளைஞர்களை விட பெரியவர்களிடையே இருக்கும் அதிக போதை பழக்கம்

ஆஸ்திரேலியர்களில் வயதானவர்கள் தேசிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறி மது அருந்துவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் நலன்புரி நிறுவனத்தின் (AIHW) அறிக்கை, 50 மற்றும்...

ஜப்பானில் ஒரு தொழிற்சாலையில் நடந்த கத்திக்குத்தில் ஐந்து பேர் படுகாயம்

மத்திய ஜப்பானில் உள்ள ஒரு டயர் தொழிற்சாலையில் எட்டு பேர் கத்தியால் குத்தப்பட்டதாகவும், ஏழு பேர் எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய...

கிரேன் சரிந்து விழுந்ததில் 90 பேர் இடம்பெயர்வு

பலத்த காற்று காரணமாக கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சவுத்போர்ட்டில் உள்ள ஒரு கேரவன் பூங்காவில் 30 டன் எடையுள்ள கிரேன் சரிந்து விழுந்ததில் 90க்கும் மேற்பட்டோர்...

கிரேன் சரிந்து விழுந்ததில் 90 பேர் இடம்பெயர்வு

பலத்த காற்று காரணமாக கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சவுத்போர்ட்டில் உள்ள ஒரு கேரவன் பூங்காவில் 30 டன் எடையுள்ள கிரேன் சரிந்து விழுந்ததில் 90க்கும் மேற்பட்டோர்...

மெல்பேர்ண் காவல் நிலையத்தில் பெண்ணை தாக்கிய நபர்

மெல்பேர்ண் காவல் நிலையத்தில் ஒரு பெண்ணின் கையில் கத்தியால் குத்திய நபர் தப்பி ஓடிவிட்டார். நேற்று அதிகாலை 2:40 மணியளவில், Mahoneys மற்றும் Edgars சந்திப்பில் 32...