விரைவில் இலங்கை முழுமையாக மூடப்படும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுமையாக முடங்கும் அபாயம் காணப்படுவதாக கல்விசாரா சேவை சங்கம் அறிவித்துள்ளது.
கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, குறித்த சங்கத்தின் செயலாளர் அஜித் கே திலகரத்ன இதனைக் குறிப்பிட்டார்
எரிபொருள் கையிருப்பு குறைவாகவே காணப்படுவதாகவும், இதனால் அரச சேவையாளர்களுக்கு, கடமைகளுக்கு சமூகமளிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், கூடிய விரைவில் நாடு முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்
நாட்டை முடக்குவதாக அரசாங்கம் அறிவிக்காவிட்டாலும், தன்னிச்சையாகவே நாடு முடங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஆட்சியாளர்களின் முறையற்ற தீர்மானங்களினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, கல்விசாரா சேவை சங்கத்தின் செயலாளர் அஜித் கே திலகரத்ன மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின், ஒரு மின் பிறப்பாக்கி கட்டமைப்பு எதிர்வரும் சனிக்கிழமை முதல் மூடப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது
பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாகவே மின் உற்பத்தி நிலையம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது