பிரிஸ்பேன் இன்னிசை மாலையில் இணைய போகும் நான்காவது சிறப்பு விருந்தினர் இவர் தான்

0
244

பிரிஸ்பேனில் ஆகஸ்ட் 28 ம் தேதி இன்னிசை மாலை 2022 என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றியாளர்களில் நான்கு பேர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

இவர்கள் நால்வருமே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் தான். சூப்பர் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வாய்ப்பால் இன்று இந்திய சினிமாவின் பல மொழிகளிலும் பிரபலமான பின்னணி பாடகர்களாக இருந்து வருகிறார்கள். சத்ய பிரகாஷ், ஸ்ரீதர் சேனா, புண்யா செல்வா ஆகியோர் கலந்து கொள்வது முன்பே அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த நான்காவது சிறப்பு விருந்தினர் யார் என்பதை நீண்ட நாட்களாக ரகசியமாகவே வைத்திருந்தனர்.

தற்போது நான்காவது சிறப்பு விருந்தினராக ஸ்ரீஷா கலந்து கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்து வளர்ந்தவரான இவர், தெலுங்கு, தமிழ், கன்னடா, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் பின்னணி பாடி உள்ளார். தமிழில் மாதவன் நடித்த மாறா படத்தில் இவர் ஒரு பாடல் பாடி உள்ளார். பக்தி பாடல் ஆல்பங்கள் பலவற்றிலும் பாடி உள்ளார்.