மேற்கு ஆஸ்திரேலியாவில் கருக்கலைப்பு சட்டத்தை திருத்துவதற்கு மாநில அரசு தயாராகி வருகிறது.
ஏறக்குறைய 04 வாரங்களுக்கு கிட்டத்தட்ட 18,000 பேரின் கருத்துக்களைப் பெற்ற பின்னர் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கருக்கலைப்புக்கு முன் அனுமதி பெறுவதற்கு தற்போதுள்ள சிக்கலான அமைப்பு எளிமைப்படுத்தப்பட வேண்டும் என பெரும்பான்மையானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதில் கருத்து தெரிவித்தவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள் என மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய திருத்தங்கள் மேற்கு ஆஸ்திரேலியா மாநில பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.