Sportsஇந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு அபராதம்

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு அபராதம்

-

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 2-வது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காமல் அதிக நேரம் எடுத்துக் கொண்டது.

இந்திய அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் 5 ஓவர்களை வீசி முடிக்காமல் இருந்தது. இதேபோல் அவுஸ்திரேலிய அணி 4 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கள நடுவர்கள் வழங்கிய அறிக்கையை அடுத்து ஐ.சி.சி. போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் இந்திய அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், அவுஸ்திரேலிய அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதமும் அபராதமாக விதித்தார்.

அத்துடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறிய குற்றத்துக்காக போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளி தண்டனையாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

2-வது இன்னிங்சில் சுப்மன் கில் 18 ஓட்டங்களில் ஸ்காட் போலன்ட் பந்து வீச்சில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

கேமரூன் கிரீன் கையை தரையில் உரசியபடி பிடித்த இந்த சர்ச்சைக்குரிய கேட்ச் சரியானது தான் என்று அறிவித்த 3-வது நடுவரின் முடிவு குறித்து சமூக வலைதளத்தில் சுப்மன் கில் விமர்சனம் செய்ததால் தண்டனைக்குள்ளாகி இருக்கிறார்.

நன்றி தமிழன்

Latest news

டிரம்ப் காரணமாக Coca-Colaவின் சமீபத்திய திருப்பம்

கரும்புச் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்பட்ட புதிய Coke-ஐ வெளியிடப்போவதாக Coca-Cola உறுதிப்படுத்தியுள்ளது. Coca-Colaவில் உள்ள பொருட்களில் மாற்றங்களைக் கொண்டுவருமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் சமூக ஊடகங்களில்...

iPhone 17 என்னென்ன வண்ணங்களில் வெளியாகிறது?

iPhone 17 தொடரின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதன் வண்ணங்கள் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. முந்தைய ஆண்டுகளைப் போலவே, ஆப்பிள்...

டெஸ்லாவை மிஞ்ச கடுமையாக முயற்சிக்கும் BYD

ஆஸ்திரேலியாவின் மின்சார வாகன (EV) சந்தையில் டெஸ்லா கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவின் சிறந்த மின்சார பிராண்டாக மாறுவதற்கான மிகப்பெரிய பிரச்சாரத்தில் BYD ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இருப்பினும்,...

ஒரு நோய்க்கு பயன்படுத்தப்படும் தூண்டுதலின் ஆரோக்கிய ஆபத்து

ஆஸ்திரேலிய மருத்துவர்களும் சுகாதார நிதி வழங்குநர்களும் முதுகுத் தண்டு தூண்டுதல்களின் பயன்பாட்டை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவர்களும் சுகாதார நிதி வழங்குநர்களும் நாள்பட்ட...