பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் குடும்பத்தினரை நான்காண்டு காலம் சிறைவைக்கப்பட்டனர்.
தாராளவாத தேசிய கூட்டணி தலைமையிலான ஆஸ்திரேலிய அரசாங்கம் இதற்காக 30 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை செலவழித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர்.
தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.
ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வசித்து வந்த அவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ஆம் ஆண்டு காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தக் குடும்பத்தை நான்கு ஆண்டுகளாக காவலில் வைத்திருப்பதால் ஆஸ்திரேலிய வரி செலுத்துவோருக்கு 30 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.