பிரபல ஆப்பிள் நிறுவனம், சந்தை மதிப்பு 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிய உலகின் முதல் நிறுவனமாக மாறியுள்ளது.
நேற்று அமெரிக்க பங்குச்சந்தை முடியும் நேரத்தில் அவர்களின் பங்கு மதிப்பு 2.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு சுமார் 194 டாலர்கள் மற்றும் அவற்றின் மொத்த சந்தை மதிப்பு 3.04 டிரில்லியன் டாலர்கள்.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தொழில்நுட்ப சாதனங்களே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 டிரில்லியன் டாலர்களை தாண்டியது.
மைக்ரோசாப்ட் தற்போது உலகின் 2வது மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது.