News‘வாடகை அப்பா’ - குளியல் இல்லம் அறிமுகப்படுத்திய புதிய சேவை

‘வாடகை அப்பா’ – குளியல் இல்லம் அறிமுகப்படுத்திய புதிய சேவை

-

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங்கில் உள்ள ஒரு குளியல் இல்லம் ஆண் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு உதவுவதற்காக (RENT A DAD) என்ற சேவையை தொடங்கியுள்ளது.

குழந்தைகளை குளிப்பாட்டுவது, பராமரித்துக் கொள்வது போன்ற வேலைகளை வாடகை அப்பாக்கள் செய்வர் எனவும் குளியல் இல்லம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசு இருந்தால் வாழ்கையில் அனைத்தையும் வாங்கி விடலாம் என்ற காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அதேபோல் எதையும் வாடகைக்கு விடக்கூடிய கால சூழல் நிலவுகிறது. தனியாக பிள்ளைகளை கவனித்துக்கொள்ள முடியாமல் அவதிப்படும் தாய்மார்களுக்காக தந்தையும் வாடகைக்கு கிடைக்கின்றனர்.

ஆண் குழந்தைகளுடன் வரும் அம்மாக்களுக்கு உதவுவதற்காக (RENT A DAD) என்ற சேவையை சீனாவை சேர்ந்த ஒரு குளியல் இல்லம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த குளியல் இல்லம் வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங் என்ற இடத்தில் உள்ளது.

ஒரு பெண் தன் மகனுடன் இங்கு வந்தால், அப்பெண் தனது மகனை வாடகை தந்தை என அழைக்கப்டும் அந்த நபரிடம் ஒப்படைத்துவிட்டு, சுதந்திரமாக நீச்சல் குளத்தில் நீராடி அனுபவிக்க முடியும்.

வாடகை அப்பா அதுவரை உங்கள் மகனை பிள்ளை போல் பார்த்துக் கொள்வார், குழந்தையை ஆண்களுக்கான குளியல் பிரிவிற்கு அழைத்துச்செல்வார் என அந்த குளியல் இல்லம் கூறுகிறது.

குழந்தைகளைக் கவனிக்கக் கிடைக்கும் ஆண்கள் அதற்கான சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கிறார்களா, எந்த வயது வரை குழந்தைகளைக் கவனிக்கிறார்கள் என்று குளியல் இல்லம் எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...