நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பயணத்தை இன்னும் எளிதாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்க நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
வெலிங்டனில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நியூசிலாந்து குடிமக்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவது ஜூலை 1 முதல் எளிதாக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான பயணத்தின் போது ஆவணங்கள் இல்லாமல் டிஜிட்டல் முறையை பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட நிபுணர் குழு ஆராய உள்ளது.