Newsஅவுஸ்திரேலியாவில் காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்த பெண்

அவுஸ்திரேலியாவில் காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்த பெண்

-

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்த நிலையில், காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்துள்ளார்.

குயின்ஸ்லாந்தை சேர்ந்த 69 வயதான ஜூடித் ஆன் வென் என்பவரே தமது கணவரின் கொடுமையில் இருந்து தப்ப, சுமார் 50 மாத்திரைகளை சூப்பில் கலந்து கணவரை கொன்ற வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்க இருக்கிறார். இருப்பினும், கடந்த 3 ஆண்டுகள் அவர் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்துள்ளதால், நீதிமன்றம் அவரை பரோலில் செல்ல அனுமதித்துள்ளது.

ஜூடித் ஆன் வென் தமது கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்துள்ளார். இதனால் தூக்கமின்மை, தனிமைப்படுத்தப்பட்டு அவநம்பிக்கையுடன் இருந்து வந்துள்ளார்.

அத்துடன், கணவரை கவனிக்க மறுத்துள்ளார். இதனால் 18 மாதங்களில் அவருக்கிருந்த உளவியல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 20,000 டொலர் செலவிட்டு, படகு ஒன்றை லான்ஸ் வென் வாங்க, அது குடும்பத்தில் கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்தே, தமது கணவர் பயன்படுத்திவந்த மாத்திரைகளில் 50 எண்ணிக்கையை சூப்பில் கலந்துள்ளார். இதில் சுருண்டு விழுந்த லான்ஸ் வென் கை நரம்பையும் ஜூடித் ஆன் வெட்டி விட, இறுதியில் உடற்கூறு ஆய்வில், மாத்திரைகள் அதிகம் உட்கொண்டதே மரண காரணம் என உறுதி செய்யப்பட்டது.

Latest news

Pepper Spray வீட்டு வன்முறையை மேலும் மோசமாக்குமா?

மக்கள் Pepper Spray-ஐ பயன்படுத்த அனுமதிப்பது வீட்டு வன்முறைக்கான மற்றொரு கருவியாக மாறும் என்ற கவலைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், மக்கள் தற்காப்புக்காக Pepper Spray-ஐ...

ஆஸ்திரேலியாவில் ஒரு பிரபலமான ஆடை பிராண்டால் செய்யப்பட்ட விசித்திர விளம்பரம்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஆடை பிராண்டான Nala, ஒரு அற்புதமான சுவரோவியத்துடன் அதன் விளம்பர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிராண்ட் மெல்பேர்ணின் Abbotsford-இற்கு முன்னால் ஒரு பெரிய சுவரோவியமாக...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் டெஸ்லாவின் “Fully Self-Driving” தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவில் சுய-ஓட்டுநர் தொழில்நுட்பத்தை (Fully Self-Driving - FSD) செயல்படுத்தப்போவதாக டெஸ்லா அறிவித்துள்ளது. இந்த அதிநவீன மென்பொருள், ஓட்டுநர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை ஸ்டீயரிங் சக்கரத்தைத்...

சமூக ஊடகங்களில் வயது வரம்புகளை அமல்படுத்துவது குறித்து வெளியான அறிக்கை

சமூக ஊடக பயனர்களின் வயதைச் சரிபார்ப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம், ஆனால் சமூக ஊடக தளங்களை அவற்றின் சொந்த முறைகளைத் தேர்வுசெய்ய விட்டுவிடுவது முரண்பாட்டிற்கான ஒரு...

சமூக ஊடகங்களில் வயது வரம்புகளை அமல்படுத்துவது குறித்து வெளியான அறிக்கை

சமூக ஊடக பயனர்களின் வயதைச் சரிபார்ப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம், ஆனால் சமூக ஊடக தளங்களை அவற்றின் சொந்த முறைகளைத் தேர்வுசெய்ய விட்டுவிடுவது முரண்பாட்டிற்கான ஒரு...

நாளை முதல் விக்டோரியாவில் கத்திகளுக்கு என்ன நடக்கும்?

விக்டோரியாவில் நாளை முதல் வாள்கள் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களின் பாதுகாப்பிற்காக இந்த ஆயுதங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும்...