Newsஐபோன் 15 சீரிஸ் வெளியீட்டு திகதி அறிவிப்பு

ஐபோன் 15 சீரிஸ் வெளியீட்டு திகதி அறிவிப்பு

-

Apple நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் 15 சீரிஸ் மொடல்களை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. எனினும், அந்நிறுவனம் சார்பில் இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஐபோன் 15 சீரிஸ் மொடல்கள், அவற்றின் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் என ஏராளமான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்துள்ளன.

அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 சீரிஸ் மொடல்களின் வெளியீட்டு திகதி பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி அமெரிக்க தொலைபேசி நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை செப்டம்பர் 13-ம் திகதி விடுமுறை எடுக்க கேட்டுக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதே நாளில் முக்கிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த திகதியில் எந்த மொடல் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், Apple நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இதே காலக்கட்டத்தில் தனது புதிய ஐபோன் மொடல்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த திகதியிலேயே ஐபோன் 15 சிரிஸ் மொடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மொடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. நான்கு மொடல்களும் அதன் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட வடிவ மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி

ஆஸ்திரேலிய அரசாங்கம் மின்சார வாகன (EV) உரிமையாளர்கள் மீது சாலை பயனர் கட்டணம் விதிக்க ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறது. தனியார் வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் எரிபொருள்...

இரவு நேர விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ள விமான நிறுவனம்

தொழில்துறை நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலியாவில் இரவு நேர விமானங்கள் பலவற்றை ரத்து செய்வதாக Air Canada தெரிவித்துள்ளது. கனடாவிலிருந்து நேற்று புறப்படவிருந்த பல நீண்ட தூர சர்வதேச...

NSW-வில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவுடன் ஆலங்கட்டி மழை

வடக்கு நியூ சவுத் வேல்ஸ் நகரத்தை பனியால் மூடியிருந்த ஆலங்கட்டி மழை குளிர்காலத்தில் ஒரு அசாதாரண நிகழ்வாகும் என்று வானிலை ஆய்வு மையம் (BOM) தெரிவித்துள்ளது. புதன்கிழமை...

சதுரங்க ஜாம்பவானை தோற்கடித்த பத்து வயது சிறுமி

பிரிட்டனைச் சேர்ந்த 10 வயது போதனா சிவானந்தன் (Bodhana Sivanandan), கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த இளைய சதுரங்க வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2025 பிரிட்டிஷ் சதுரங்க சாம்பியன்ஷிப்பின்...

அடிலெய்டின் CBD-யில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து

அடிலெய்டின் CBD-யில் உள்ள Hindley தெருவில் உள்ள ஒரு உணவு வணிகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சேத மதிப்பு லட்சக்கணக்கான டாலர்களில் மதிப்பிடப்பட்டுள்ளது. Hindley தெருவில் மதியம் 1:45...

மில்லியன் கணக்கான பூச்சிகள் மற்றும் வனவிலங்கு மாதிரிகளை வைக்க $90 மில்லியன் செலவில் புதிய வசதி

மில்லியன் கணக்கான பூச்சிகள் மற்றும் வனவிலங்கு இனங்கள் இப்போது கான்பெராவில் உள்ள "Library of life on Earth"-இல் ஒரே கூரையின் கீழ் வைக்கப்படும். Diversity என்று...