Breaking Newsவாழ்ந்தால் இங்குதான் வாழவேண்டும் – உலகளவில் முதலிடம் பிடித்த ஆஸ்திரியத் நகரம்!

வாழ்ந்தால் இங்குதான் வாழவேண்டும் – உலகளவில் முதலிடம் பிடித்த ஆஸ்திரியத் நகரம்!

-

உலகளவில் வாழ்வதற்கு சிறந்த நகரம் என ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா (Vienna) நகரம் அறிவிக்கப்பட்டுள்ளதாக Economist சஞ்சிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியன்னா நகரம் ஏற்கனவே 2018, 2019-ஆம் ஆண்டுகளில் முதலிடத்தில் வந்தது.

நிலைத்தன்மை, சிறந்த உள்கட்டமைப்பு ஆகிய அம்சங்கள் குடியிருப்பாளர்களைக் கவர்வதாகச் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

தரவரிசையில் முதல் 10 இடங்களில் வந்த நகரங்களில் 6, ஐரோப்பாவைச் சேர்ந்தவை.

கோப்பன்ஹேகன், ஸூரிக் (Zurich), ஜெனீவா (Geneva), ஃபிராங்க்ஃபர்ட் (Frankfurt), ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) ஆகிய ஐரோப்பிய நகரங்கள் தரவரிசையில் இடம்பெற்றிருந்தன.

ஒசாக்கா நகரமும், மெல்பர்ன் நகரமும் 10-ஆம் இடத்தில் வந்தன. தரவரிசையில் மற்ற சில நகரங்கள் பிடித்த இடங்கள்

பாரிஸ் – 19
பிரசல்ஸ் – 24
லண்டன் – 33
பார்சலோனா-35
மிலான் – 49
நியூயார்க் – 51
பெய்ச்சிங் – 71
ஆக்லந்து – 34

சிரியாவின் டமாஸ்கஸ் (Damascus) நகரம் வாழக்கூடிய நகரங்களின் தரவரிசையில் கடைசி இடத்தைப் பிடித்தது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அஞ்சல் வாக்களிப்பு பற்றி விழிப்புணர்வு

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம், கூட்டாட்சித் தேர்தலில் அஞ்சல் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 23 ஆம் திகதி மாலை 6 மணியுடன் முடிவடையும் என்று கூறுகிறது. மே 3...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பாம்பு கடி

உங்கள் வீட்டிற்குள் வரும் பாம்புகளைத் தொடவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது என்று ஆஸ்திரேலிய வனவிலங்கு மீட்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால், அனைத்து...

பாலின ஊதிய சமத்துவமின்மை குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

பாலின ஊதிய இடைவெளியை நிவர்த்தி செய்ய நியாயமான பணி ஆணையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அதிக பெண் பணியாளர்களைக் கொண்ட தொழில்களில் லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு...

வேற்றுகிரகவாசிகள் பற்றி வெளியான வலுவான தடயங்கள்

வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான வலுவான தடயங்களில் ஒன்றை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இது K2-18b என்று அழைக்கப்படும் ஒரு கிரகம், இது பூமியின் சூரிய மண்டலத்தில் இல்லை, ஆனால்...

மெல்பேர்ண் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

மெல்பேர்ணின் தென்கிழக்கே உள்ள விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள மூராபின் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டு பேரை ஏற்றிச்...

சிட்னியில் பரவிவரும் ஒரு நோய் – ஒருவர் மரணம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் லெஜியோனேயர்ஸ் நோயின் பரவலால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு குழுவினரின் அறிகுறிகள் வெளிவருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் 13 முதல் ஏப்ரல் 5 வரை சிட்னி...