மெல்போர்னில் சட்டவிரோத சூதாட்ட விடுதி ஒன்று சோதனையிடப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெருமளவிலான பணம் – போதைப்பொருள் – மதுபானம் மற்றும் சூதாட்ட விளையாட்டு விளையாட பயன்படுத்திய பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக விக்டோரியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த இடத்திற்குள் நுழைவதற்கு $8000 மதிப்புள்ள பொருட்கள் வாங்குவது கட்டாய விதியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இங்கு தினமும் சுமார் 50 பேர் சூதாட்டத்திற்கு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 35 வயதுடைய நபரொருவரும் இந்த இடத்தை நடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படுவதுடன் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட உள்ளன.
மற்றவர்கள் மீது சட்டவிரோத சூதாட்ட விடுதியில் தங்கியிருந்தமை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும்.
ஆஸ்திரேலிய சட்டத்தின்படி, சட்டவிரோத சூதாட்ட மையத்தை நடத்தினால் $192,000 அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.