Newsஆஸ்திரேலியா வரும் அகதிகளை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை!

ஆஸ்திரேலியா வரும் அகதிகளை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை!

-

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வரும் ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வருகையைத் தடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் தெரிவித்துள்ளார்.

அதற்காக தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் நடைமுறையில் வைத்திருப்பது அவசியமானது என அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கைத் தஞ்சக்கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், ஆஸ்திரேலியாவின் எல்லைக் கொள்கை மாறவில்லை என தொழிற்கட்சி அரசாங்கம் உறுதிப்பட தெரிவித்திருக்கிறது.

“தற்காலிக பாதுகாப்பு விசாக்களுக்கு முடிவுக் கட்டுவோம் எனத் தொழிற்கட்சி தெளிவாக தெரிவித்துள்ளதால் எதுவும் மாறவில்லை எனத் தொழிற்கட்சியால் சொல்ல முடியாது,” என ஆஸ்திரேலியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் விமர்சித்திருக்கிறார்.

தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் என்பது எல்லைகள் இறைமை நடவடிக்கையின் (Operation Sovereign Borders) முக்கியமான அங்கம் என கரேன் ஆண்டூருஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படும் உடல்நல அச்சுறுத்தல்கள்

வீட்டில் கிடைக்கும் ஆன்டிபயாடிக் உலகின் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) 2019 ஆம் ஆண்டில் 1.27 மில்லியன் உலகளாவிய இறப்புகளுக்கு பாக்டீரியா...

பறவைக் காய்ச்சல் தொற்றுக்நோய்க்கு முன்னெச்சரிக்கையாக தயாராகும் ஆஸ்திரேலியா

உலகெங்கிலும் பரவி வரும் H5 பறவைக் காய்ச்சல் தொற்றுநோயைத் தடுக்க ஆஸ்திரேலியாவைத் தயார்படுத்துவதற்காக, உயிரியல் பாதுகாப்புத் திட்டத்திற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் கூடுதலாக செலவிடப்பட்டுள்ளன. இந்த...

ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் இரண்டு முறை வரி செலுத்த வேண்டுமா?

வரும் நாட்களில் விதிக்க திட்டமிடப்பட்டுள்ள சாலை பயனர் வரி, மின்சார வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறியுள்ளார். அதன்படி, பெட்ரோல் வாகன பயனர்களுக்கு...

விக்டோரிய மக்களுக்கு $4 மில்லியன் மதிப்புள்ள இலவச பயிற்சி வகுப்புகள்

விக்டோரியன் அரசு, ஊழியர்களுக்கும் வணிகங்களுக்கும் தேவையான டிஜிட்டல் திறன்களை வழங்குவதற்காக ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, $4.2 மில்லியன் டிஜிட்டல் வேலைகள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது...

விக்டோரிய மக்களுக்கு $4 மில்லியன் மதிப்புள்ள இலவச பயிற்சி வகுப்புகள்

விக்டோரியன் அரசு, ஊழியர்களுக்கும் வணிகங்களுக்கும் தேவையான டிஜிட்டல் திறன்களை வழங்குவதற்காக ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, $4.2 மில்லியன் டிஜிட்டல் வேலைகள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது...

விக்டோரியாவில் 1000 புதிய வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று கிறிஸ்துமஸுக்கு முன்பு 3,500 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்த தயாராகி வருகிறது. Australia Post தனது பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த...