மணமகள் சந்தை என்ற விசித்திர முறையை நாடு ஒன்று பின்பற்றி வருகிறது.
பல்கேரியா நாட்டில் மணமகள் சந்தை என்ற முறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் மக்கள் அலைந்து திரிந்து தங்களுக்கு பிடித்த மனைவிகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர்.
சந்தை முற்றிலும் அந்நாட்டு அரசின் அனுமதி பெற்று நடக்கிறது. இது அனைத்து பெண்களுக்கும் பொருந்தாது, ஏழை பெண்களுக்காக மட்டுமே இந்த மணமகள் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பலமுள்ள குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை விற்க முடியாது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள், தங்களின் மகள்களை இந்த சந்தைக்கு அழைத்து செல்கின்றனர்.
கலையடி சமூகத்தினர் தான் அதிகம் தங்களின் மகள்களை இங்கு விற்கின்றனர். இந்த பெண்களை வாங்கும் ஆண் மகனும் அதே சமூகத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும்.
வாங்கிய பெண்ணுக்கு மருமகள் அந்தஸ்தை ஆணின் குடும்பம் கட்டாயம் வழங்க வேண்டும் என சில நிபந்தனைகளும் விதிக்கப்படுகிறது. இந்த சந்தை தற்போது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.