சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசரப்பட வேண்டாம் என முன்னாள் பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
தென் பசிபிக் பெருங்கடலில் தனது இராணுவ பலத்தை அதிகரிப்பதே சீனாவின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்காட் மோரிசன் நிர்வாகத்தின் போது, ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே வேறுபாடுகள் வளர்ந்தன.
அதனை மீட்டெடுக்கும் நோக்கில் அடுத்த 02 மாதங்களுக்குள் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தற்போதைய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேற்று தெரிவித்தார்.
இது சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் விமர்சகர்கள் கணித்திருந்தனர்.