NewsPR கோரி அணிவகுப்பை ஆரம்பித்த இலங்கையர் 40 நாட்களுக்கு பிறகு சிட்னி...

PR கோரி அணிவகுப்பை ஆரம்பித்த இலங்கையர் 40 நாட்களுக்கு பிறகு சிட்னி திரும்பினார்

-

தற்போது அவுஸ்திரேலியாவில் அகதிகள் விசாவில் உள்ளவர்களுக்கும் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் நிரந்தரத் தீர்வைக் கோரி இலங்கையரால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இலக்கை அடைந்துள்ளது.

நீல் பார்ரா ஆகஸ்ட் 1 ஆம் தேதி விக்டோரியாவின் பல்லாரத்தில் இருந்து இந்த நடைபயணத்தை தொடங்கினார்.

1,000 கிலோ மீட்டர் நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சிட்னிக்கு வந்திருந்தார்.

12,500க்கும் மேற்பட்ட அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி 19,000 கையெழுத்துகளுடன் கூடிய மனு ஒன்றையும் நீல் பாரா கொண்டுவந்து, அது சிட்னியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

2008ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற நீல் பாரா மற்றும் அவரது மனைவி மற்றும் அவர்களது 3 பிள்ளைகள், ஏறக்குறைய 9 வருடங்களாக வீசா எதுவுமின்றி நாட்டில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...