தனது செல்லப்பிராணி மலைப்பாம்பை பகிரங்கமாக காட்சிப்படுத்திய ஆஸ்திரேலிய நபருக்கு $2,322 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாம்புடன் குறித்த நபர் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட விதம் சமூக வலைத்தளங்கள் ஊடாக அறியப்பட்டது.
கோல்டு கோஸ்ட்டில் வசிக்கும் சம்பந்தப்பட்ட நபர் இந்த விலங்கை வளர்க்க உரிமம் பெற்றிருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விலங்கை வளர்க்க வேண்டும்.
அந்த இடங்களில் இருந்து பாம்பை எந்த வகையிலும் வெளியே எடுத்தால் அதற்கான சிறப்பு அனுமதிப் பத்திரம் பெறப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய வனவிலங்கு திணைக்களம் வலியுறுத்துகிறது.
பாம்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.