Newsசிட்னி சாலை நடுவே தீப்பற்றிய லொறி - உடல் கருகி பலியான...

சிட்னி சாலை நடுவே தீப்பற்றிய லொறி – உடல் கருகி பலியான பெண்

-

சிட்னியில் விபத்தில் சிக்கி சாலை நடுவே நெருப்பு கோளமான பிக்-அப் லொறி ஒன்றில் சிக்கிக்கொண்ட பெண் ஒருவர் உடல் கருகி பலியாகியுள்ளார்.

சிட்னியின் தென்மேற்கே மெனங்கிள் சாலையில் ஒரு வாரம் முன்னர் விடிகாலை சுமார் 4.20 மணிக்கு குறித்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பிக்-அப் லொறியில் பயணித்த சேல மௌமலங்கா என்ற பெண்மணி உடல் கருகி மரணமடைந்தார்.

இவரது உறவினர் ஒருவர் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார். இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் 37 வயதான மௌமலங்கா பயணித்த பிக்-அப் லொறி நெருப்பு கோளமாக மாறியுள்ளது.

இதில் சிக்கிக்கொண்ட அவர் பரிதாபமாக பலியானார். சிட்னியின் டோங்கன் சமூகத்தை சேர்ந்தவர் சேலா மௌமலங்கா. அவரது திடீர் மறைவு அந்த சமூக மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில், உங்களை மீட்க நான் இல்லாமல் போனேன் என ஒருவர் உருக்கமாக அஞ்சலி செய்துள்ளார். நீங்கள் தூக்கத்தில் இருப்பது தெரியும், எழுந்து வாருங்கள் என இன்னொருவர் பதிவு செய்துள்ளார்.

அழகான தருணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டவர் நீங்கள், ஒரு காலத்திலும் இந்த நினைவுகள் நீங்காது என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

இளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை – உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி டயானாவின் உறவினர்கள்

பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் புறக்கணித்த நிலையில், ஹரிக்கு ஆதரவாக நிற்க, இளவரசி டயானாவின் சகோதரரும் சகோதரியும் ஓடோடிவந்த சம்பவம்...

மக்கள் இன்றி காலியாக இருக்கும் 9 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள்

ஜப்பானில் காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை சாதனை எண்ணிக்கையான ஒன்பது மில்லியனாக உயர்ந்துள்ளது. நாட்டில் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக...

பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டை தடுக்க புதிய மென்பொருள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டு சுமார் 85 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடர்களை குறிவைத்து பாதுகாப்பை...

வரலாறு காணாத அளவுக்கு உயரும் வீடுகளின் விலை

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் வட்டி விகித சுழற்சி உள் நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும்...

பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டை தடுக்க புதிய மென்பொருள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டு சுமார் 85 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடர்களை குறிவைத்து பாதுகாப்பை...

சிட்னி உட்பட பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை

சிட்னி உட்பட பல பகுதிகளில் மழையுடனான வானிலை வார இறுதி நாட்களிலும் தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வார இறுதியில் நியூ சவுத் வேல்ஸ்...