Newsதேன்கூடுகளுக்கும் முடக்கநிலையை அறிவித்த ஆஸ்திரேலியா

தேன்கூடுகளுக்கும் முடக்கநிலையை அறிவித்த ஆஸ்திரேலியா

-

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தேன்கூடுகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனீக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ‘Varroa Mite’ ஒட்டுண்ணி பரவுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. நியூகாசல் (Newcastle) துறைமுகத்தில் ‘Varroa Mite’ ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது.

அதையடுத்து கடுமையான உயிரியல் பாதுகாப்புப் பகுதி ஒன்றை அதிகாரிகள் உருவாக்கினர். அதன்படி, அந்த 50-கிலோமீட்டர் பகுதிக்குள் உள்ள தேனீக்கள், தேன்கூடுகள் ஆகியவற்றை நகர்த்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர்.

‘Varroa Mite’ ஒட்டுண்ணி தேனீக்களை அழித்து நாட்டின் தேன் உற்பத்தியைப் பாதிக்கக்கூடும். அதனால் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது முக்கியம் என்று ஆஸ்திரேலியத் தேனீத் தொழில்துறை மன்றம் தெரிவித்துள்ளது.

ஒட்டுண்ணியை முழுமையாக ஒழிப்பதற்காக அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மாநில முதன்மைத் தொழில்துறைகளின் பிரிவும் கூறியுள்ளது. தேன் உற்பத்தி தவிர, தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் தேனீக்கள் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

28 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கர விமான விபத்து

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய மூன்று எத்தியோப்பியர்களால் ஒரு விமானம் கடத்தப்பட்டு நவம்பர் 23ம் திகதியுடன் 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. நவம்பர் 23, 1996 இல், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்...

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...

நிறம் மாறும் மெல்பேர்ண் கால்வாய் – மக்களுக்கு எச்சரிக்கை

மெல்பேர்ணின் மேற்குப் பகுதியில் உள்ள கால்வாயில் பச்சை நிறமாக மாறியிருப்பதால், அருகில் வசிக்கும் மக்கள் தண்ணீரில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். க்ரூக்ஷாங்க் பூங்காவில் அமைந்துள்ள கல்...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...