கைவிடப்பட்ட பொதுநலவாய விளையாட்டுப் போட்டி தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்காக விக்டோரியா மாகாண அரசாங்கம் 1.3 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வாபஸ் தீர்மானம் அறிவிக்கப்படுவதற்கு 3 வாரங்களுக்கு முன்னரே அப்போதைய டேனியல் அன்ட்ரூஸ் அரசாங்கம் சட்டத்தரணி ஒருவரின் உதவியை நாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
விக்டோரியா அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் லண்டன் சென்று பொதுநலவாய விளையாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும், அதற்காக பொதுமக்களின் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆளும் தொழிற்கட்சி அரசாங்கம் விக்டோரியர்களின் வரிப்பணத்தை இவ்வாறு செலவழிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை செனட் குழு நடத்த உள்ள போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.