விக்டோரியாவில் உள்ள கிப்ஸ்லாந்தில் அடைமழை பெய்து வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாம்சன் ஆற்றின் நீர்மட்டம் 3.7 மீற்றராகவும், மிட்செல் ஆற்றின் நீர்மட்டம் 6.51 மீற்றராகவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை வரை சுமார் 120 வீடுகள் மற்றும் சொத்துக்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த நிவாரண திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற மக்கள் மறு அறிவித்தல் வரை வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விக்டோரியா மாநில அதிகாரிகள் அடுத்த 12 முதல் 24 மணி நேரத்தில் மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு பேரிடர் எச்சரிக்கையை நீட்டிப்பது அல்லது நீக்குவது குறித்து முடிவெடுப்பதாக அறிவித்துள்ளனர்.