உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நியூஸிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக வில் யங் 70 ஓட்டங்களையும், டொம் லதம் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், நெதர்லாந்து அணியின் ரோலோஃப் வென் டெர் மெர்வ் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 323 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியுற்றது.
நன்றி தமிழன்