ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பெராவில் புதிதாக கொரோனா அலை எழுவது குறித்து அந்நகர சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய தலைநகர பிரதேசத்தில் மற்றொரு கொரோனா தொற்று அலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரேச்சல் ஸ்டீஃபன் ஸ்மித் நேற்று குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலிய தலைநகர பிரதேசத்தில் கொரோனாவுக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மருத்துவமனைகளில் கொவிட்-19க்காக 121 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து அப்பகுதியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இதுவே ஆக அதிகம்.
கேன்பெரா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டிருப்பதே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்று அரசாங்கம் கூறியது.