சிட்னியில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்ததால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
இதன்படி, கப்ரமட்டாவிலிருந்து கிரான்வில் மற்றும் பிளாக்டவுனில் இருந்து பென்ரித் வரையிலான புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் மணிக்கு 82 கிமீ வேகத்தில் காற்று வீசியதால், பெரிய மரங்கள் ரயில் பாதையில் விழுந்தன.
ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கூடுதல் பேருந்து சேவைகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சூறாவளிக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது.
இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் கிழக்கு விக்டோரியா மாகாணங்களில் மணிக்கு 107 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மத்திய கடற்பரப்பில் கடல் அலைகள் சூறாவளியை எதிர்கொண்டு 5 அடி உயரத்திற்கு எழலாம் எனவும் வானிலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.