Cinemaஇணையத்தில் வெளியானது 'லியோ' திரைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

இணையத்தில் வெளியானது ‘லியோ’ திரைப்படம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

-

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் இன்று வெளியாகியுள்ளது. கேரளாவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாத காரணத்தால் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

நேற்று அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை பார்த்து வருகின்றனர். முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் ‘லியோ’ திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என திரை ஆர்வலர்கள கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘லியோ’ திரைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெளியான முதல் நாளே முழு திரைப்படமும் இணையத்தில் வெளியாகி உள்ளதால் சினிமா துறையினர் மற்றும் திரை ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா

ராணுவத் தலையீடு தொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் கடற்படையின் வளைகுடா பகுதியில் சீன போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் நடத்திய ராணுவ பயிற்சியே...

ஆபாசமான இணையதளங்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற புதிய வழிமுறை

இணையத்தில் குழந்தைகள் ஆபாசமான படங்களை பார்ப்பதை குறைக்கும் நோக்கில் சில புதிய நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய திட்டங்களின்படி, இணையதளத்தை அணுகும்போது வயது...

சர்வதேச மாணவர்களுக்கான புதிய விதிகளுக்கு எதிராக உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகத் துறை எச்சரித்துள்ளது. நேற்று காலை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச கல்வி கவுன்சில் கூடியபோது,...

இன்றைய மத்திய பட்ஜெட் பற்றிய ஒரு கணிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 2 அல்லது 3 சதவீத இலக்கை எட்டும் என்று கருவூலம் கணித்துள்ளது. இன்றைய மத்திய பட்ஜெட் எதிர்பார்த்ததை விட ஓராண்டு முன்னதாகவே...

காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு சிறப்பு அறிவிப்பு

காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்த நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த ஆண்டு காய்ச்சல் சீசன்...

உலகின் 10 பணக்கார பெண்களின் சொத்துக்கள் பற்றி வெளியான தகவல்

இந்த ஆண்டு மே மாதத்திற்குள், ஃபோர்ப்ஸ் இதழ் உலகின் 10 பணக்கார பெண்களைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் இதழ் உலகின் பணக்கார பெண்கள் மற்றும் அவர்களின்...