வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்திக்க ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தயாராகி வருகிறார்.
04 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் அடுத்த வாரம் வாஷிங்டன் செல்ல உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
சர்வதேச தலைவர்கள் பலர் இஸ்ரேலுக்கு சென்று ஆதரவு தெரிவித்து வரும் சூழலில், பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இதுவரை அவ்வாறு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும், இஸ்ரேலுக்கு எந்த வகையிலும் விஜயம் செய்யப் போவதில்லை என பிரதமர் அல்பானீஸ் நேற்று வலியுறுத்தியுள்ளார்.