Newsஆந்திராவில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து -19 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து -19 பேர் உயிரிழப்பு

-

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இந்த பயங்கர விபத்தில் பலாசா ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் அலறினர். ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 19 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ரயில்கள் விபத்துக்கு உள்ளான தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளில் சிரமங்கள் நிலவுகிறது. பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்ததாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் அலுவலகத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டக பள்ளி ரயில் நிலையத்தில் இடம்பெற்ற ரயில்கள் விபத்து குறித்து முதலமைச்சர் அதிர்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, காயமடைந்தவர்களுக்கு விரைவாக சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒடிசாவில் கடந்த ஜுன் மாதம் 2 ஆம் திகதி சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் 280 பேர் பலியாகினர். இந்தியாவில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்துக்களில் ஒன்றாக ஒடிசாவின் பாலாசோர் ரயில் விபத்து அமைந்தது.

ஒடிசா ரயில் விபத்து சம்பவம் ஏற்படுத்திய ரணமே மக்கள் மத்தியில் இன்னும் முழுமையாக அகலாத நிலையில், ஆந்திராவில் இன்று இந்த ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலைக் கழுகு தேர்வு

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்தாா். வெண்தலைக் கழுகுகள் அறிவியல் ரீதியாக “ஹாலியேட்டஸ் லுகோசெபாலஸ்”...

முதல் முறையாக வெளிநாடு செல்லும் காதலர்களுக்கான அறிவுரை

மனைவியுடன் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் வழிகாட்டிகளை 'சிஎன் டிராவலர்' வெளியிட்டுள்ளது என்பதும் சிறப்பு. அதன்படி, அவர்கள் தங்களது முதல் வெளிநாட்டுப்...

விக்டோரியாவில் உள்ள நீரில் கண்டறியப்பட்டுள்ள ஒரு அசாதாரண வைரஸ்

விக்டோரியாவில், எங்கள் நீரில் ஒரு அசாதாரண வைரஸ் போக்கு ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் நடத்தப்பட்ட வழக்கமான கழிவுநீர் மாதிரி சோதனையின் போது இது...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

சாதனை படைத்தது MCG-யின் முதல் நாள் வசூல்

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) 26ம் திகதி தொடங்கிய Boxing Day டெஸ்ட் போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். அதன்படி, முதல் நாளில் Boxing Day...