இது என்னுடைய கதையல்ல; புலம் பெயர்ந்தவர்களின் கதை…ஆஸ்திரேலிய அமைச்சர் பென்னி வோங்

0
397

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் பென்னி வோங். ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் கலைகள் மற்றும் சட்டக் கல்வி பயின்றவர். ஆஸ்திரேலிய அரசில் முக்கிய பதவியை வகித்தாலும் இவர் பிறந்தது என்னவோ மலேசியாவில் தான். மலேசியாவின் கடற்கரை நகரமான சபாங் மாநிலத்தில் உள்ள கோத்தா கினபாலுவில் பிறந்தவர்.

மலேசியாவின் பகழ்பெற்ற கட்டடக் கலை நிபுணரான ஃபிரான்சிஸ் வோங் தான் பென்னி வோங்கின் தந்தை. இவர் எட்டு வயது சிறுமியாக இருக்கும் போது மலேசியாவில் இருந்து வந்து ஆஸ்திரேலியாவில் இவரது குடும்பத்தினர் குடியேறினர். பென்னி வோங் இளம் வயதாக இருக்கும் போது அவரது தந்தை அடிக்கடி மலேசியா அழைத்துச் செல்வார்.

ஆஸ்திரேலிய அரசின் பிரதிநிதியாக, உயர் பதவியில் பொறுப்பேற்ற பிறகு சமீபத்தில் தான் முதல் முறையாக மலேசியா சென்றார் பென்னி வோங். மூன்று நாள் பயணமாக மலேசியா சென்ற அவர், அங்கு தனது அப்பாவுடன் வழக்கமாக செல்லும் உணவகத்திற்கு சென்று, தனக்கு விருப்பமான உணவு வகைகளை உண்டு மகிழ்ந்துள்ளார். ஆனால் முதல் முறையாக தனது தந்தையில்லாமல் தனியாக மலேசியா வந்ததுள்ளது சிறிது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வோங்கின் தந்தை தற்போது மெல்பர்னில் வசித்து வருகிறார்.

ஆனால் சபாகிங்கிற்கு பென்னி வோங்கிற்கு நீண்ட கால உறவு உண்டு. அவரின் இளைய சகோதரரான ஜேம்ஸ், அவரது குடும்பத்தினர்,இந்த உறவினர்கள் ஆகியோர் தற்போதுள் மலேசியாவில் தான் வசித்து வருகிறார்கள். ஆஸ்திரேலியாவின் உயர் பதவியை வகித்த பிறகு முதல் முறையாக பென்னி வோங் மலேசியா வந்ததால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு நேரத்திலும் சபாங் மக்கள் ஒன்று கூடி பென்னி வோங்கை வரவேற்றதுடன், பலர் கூட்டமாக வந்து வோங்குடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பாரம்பரிய டிராகன் நடனத்துடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தனது மலேசிய பயணத்தின் போது மறைந்த தனது பாட்டியின் கல்லறைக்கும் சென்று வோங் மரியாதை செலுத்தி உள்ளார். கினபாலுவில் உள்ள தான் படித்த சர்வதேச பள்ளிக்கும் வோங் சென்றார். இந்த பள்ளியின் பிரதான கட்டிடம் பென்னி வோங்கின் தந்தையும் கட்டிடக் கலை நிபுணரான வோங்கால் கட்டப்பட்டதாகும். பள்ளியில் உள்ள மாணவர்களுடன் அமர்ந்து பேசிய பென்னி வோங், “நான் பென்னி வோங். நான் இங்கு தான் பிறந்தேன். நானும் இதே பள்ளியில் தான் படித்தேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 10 ஆண்டுகளுக்கு முன் கொரோனா பெருந்தொற்றிற்கு முன்பாக இதே பள்ளி வளாகத்தில் காலரா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தான் வரிசையில் நின்றதையும், ஒரே ஊசியில் பலருக்கும் தடுப்பூசி போடப்பட்டதையும் பென்னி வோங் பகிர்ந்து கொண்டார்.

மலேசியாவில் தாங்கள் வசித்த வீடு உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் அவர் சென்றார். அவர் கூறுகையில், இங்கே நீங்கள் பார்ப்பது என் வாழ்க்கையின் சில பகுதிகள் தான். ஆனால் இந்த கதை ஆஸ்திரேலியாவில் உள்ள பலருக்கும் தெரியும். புலம்பெயர்ந்தவர்களின் கதை. நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் மற்றும் நீங்கள் யார் என்பது பற்றிய நினைவுகள். இது ஆஸ்திரேலிய கதையின் மிக முக்கியமான பகுதியாகும். தென்கிழக்கு ஆசியாவுடன் ஆஸ்திரேலியா பேசுவது மிக முக்கியம் என நினைக்கிறேன். நாங்கள் இந்த பிராந்தியத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறோம் என்பதையும், எங்கள் எதிர்காலத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் என்பதையும் அங்கீகரிக்கிறது. இந்த சவாலான கால கட்டத்தில் நாங்கள் ஒன்றாக செய்யும் போது அதை சிறப்பாக செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஆட்டிசமும் தீபனும் நானும்…ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படி கையாளனும்…ஆலோசனை வழங்கும் பாமினி
Next articleஅரசியலில் நுழையும் எந்த எண்ணமும் இல்லை – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்