பிரித்தானியாவின் முன்னாள் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறந்த இடமான பிளென்ஹெய்ம் அரண்மனையில் நிறுவப்பட்ட 9 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கக் கழிவறை திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
04 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2019 ஆம் ஆண்டு 18 காரட் தங்க மலசலகூடம் கொள்ளையடிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களை கைது செய்ய முடியவில்லை.
சந்தேகநபர்கள் 35 மற்றும் 39 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மீது திருட்டு, சதி மற்றும் சொத்து திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் பிளென்ஹெய்ம் அரண்மனை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதன் மூலம், ஒவ்வொரு நபருக்கும் மூன்று நிமிடங்களுக்கு தங்கக் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது, மேலும் சந்தேக நபர்கள் அருகில் உள்ள ஜன்னலைப் பயன்படுத்தி அதை வெளியே எடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
திருடப்பட்ட குறித்த மலசலகூடப் பெட்டி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், உரிய நிலையில் உள்ள கழிவறைப் பெட்டியை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கும் எனவும் பிரித்தானிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.