ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரம் பலத்த காற்றும், கடும் மழையும் வெள்ள நிலைமையை மோசமாக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியிருப்பதைப் பார்க்க முடிவதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
மீட்புப் படையினர் படகுகளில் சென்று மக்களைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோர வட்டாரத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை மேலும் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.