கடந்த வாரம் இடம்பெற்ற Optus சேவைகள் வீழ்ச்சியடைந்தமை தொடர்பில் கேள்வியெழுப்புவதற்காக நிறுவனத்தின் தலைவர்கள் இன்று பாராளுமன்ற செனட் விசாரணைக் குழுவின் முன் அழைக்கப்பட்டுள்ளனர்.
Optus CEO கெல்லி ரோஸ்மரினிடம், அன்று காலை 04.05 மணிக்கு ஏற்பட்ட சேவை செயலிழப்பை எப்படி கண்டுபிடித்தார் என்று கேட்கப்பட்டது.
மற்ற Optus வாடிக்கையாளர்களைப் போலவே, அன்றைய தினம் கண்விழித்த பிறகு தான் தெரிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெல்லி ரோஸ்மரின் 228 அழைப்புகளைச் செய்ய முயன்றார், ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்தன.
இதற்கிடையில், 0-0-0 அல்லது டிரிபிள் ஜீரோவை அழைப்பது ஏன் சாத்தியமில்லை என்பதை புரிந்து கொள்ள முடியாது என்று தலைமை நிர்வாக அதிகாரி மேலும் கூறியிருந்தார்.
கடந்த வாரம் புதன்கிழமை கிட்டத்தட்ட 14 மணிநேரம் நீடித்த Optus சேவைகளின் முறிவு காரணமாக சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.