Cinemaகதீஜா ரஹ்மான் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

கதீஜா ரஹ்மான் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

-

பிரிட்டன்- இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் ‘லயனஸ்’ படத்தின் மூலம் சர்வதேசளவில் இசையமைப்பாளராக கதீஜா ரஹ்மான் அறிமுகமாகிறார்.

இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும் பிரிட்டனின் பிரிட்டிஷ் திரைப்பட கழகமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் இரு பெண்கள் பற்றிய கதையை மையப்படுத்தி உருவாகவுள்ளது.

சீக்கிய பேரரசின் கடைசி அரசரான மஹாராஜா துலீப் சிங்கின் மகள் சோபியா துலீப் சிங் வாழ்வையொட்டிய கதை ஒரு பகுதியாகவும் 1990-களில் வாழும் படித்த புலம்பெயர்ந்த பெண்ணின் புனைவு கதை மற்றொரு பகுதியாகவும் படத்தில் இடம்பெறவுள்ளது.

பிரிட்டிஷ் நடிகை பைஜ் சந்து மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோர் இந்தக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். பெண் இயக்குநர் கஜ்ரி பாபர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் போஸ்டர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கதீஜா ரஹ்மான் பேசும்போது, “லயனஸ் படத்தில் வேலை செய்வதை கெளரவமாகவும் அதே நேரம் சுவாரசியமாகவும் உணர்கிறேன். இந்தப் படத்தின் கதையைக் கேட்டது முதலே இதனோடு பிணைக்கப்பட்டுவிட்டேன். இளவரசி சோபியாவின் போராட்டத்துக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைப்பதே எங்களின் விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.

2020-ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்த ஃபரிஷ்தா என்கிற பாடலை கதீஜா பாடினார். அதன் பிறகு இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், பாடகர் அறிவு ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய கதீஜா, தமிழில் இயக்குநர் ஹலீதா ஷமீம் இயக்கும் மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

நன்றி தமிழன்

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...