பல்வேறு ஆலோசனை சேவைகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் சார்பாக விக்டோரியா மாநில அரசு 2021-22 நிதியாண்டில் செலவழித்த தொகை $4.2 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
04 வருடங்களில் 50 வீத செலவு அதிகரிப்பாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 06 வருடங்களில் ஆலோசனை சேவைகளுக்காக மாத்திரம் 05 நிறுவனங்களுக்கு 800 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக விக்டோரியா கணக்காய்வு திணைக்களம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் பெரும்பாலான பணம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும், வரி செலுத்துவோரின் பணத்தை வரம்பற்ற முறையில் செலவிடுவது குறித்து பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
டேனியல் ஆண்ட்ரூஸ் நிர்வாகம் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வாக்குறுதியை மீறியதே இதற்குக் காரணம்.