Newsகூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய AI தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய AI தொழில்நுட்பம்

-

செய்யறிவு தொழில்நுட்பங்கள் தற்போது அதிக வளர்ச்சியைக் கண்டு, பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தனது ‘ஜெமினி’ (Gemini) எனும் புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘சாட் ஜிபிடி’க்கு (ChatGPT) போட்டியாக தனது ‘பார்ட்’ (Bard) செய்யறிவு தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்திருந்தது. பல போட்டிகளுக்கு நடுவில் ‘பார்ட்’ தொழில்நுட்பம் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை. ஆனால் கூகுள் தற்போது வெளியிட்டுள்ள ‘ஜெமினி’ அனைத்து செய்யறிவு தொழில்நுட்பங்களையும் விஞ்சும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெமினி நனோ (Gemini Nano), ஜெமினி ப்ரோ (Gemini Pro), ஜெமினி அல்ட்ரா (Gemini Ultra) என மூன்று வடிவங்களில் இச்செய்யறிவு தொழில்நுட்பம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

ஜெமினி அல்ட்ரா, பல வழிகளில் உரையாடல்களை மேற்கொள்ளும் திறன்கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்து வடிவில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள், காணொளி, ஒலி மற்றும் குறியீடு வடிவிலும் உரையாடல்களை மேற்கொள்ளும் திறன்கொண்டதாக ஜெமினி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘ஜெமினி நனோ’ தற்போது ‘கூகுள் பார்ட்’ தளத்தில் பயன்பாட்டிற்கு உள்ள நிலையில், ஜெமினி ப்ரோ டிசம்பர் 13 அன்றும், ஜெமினி அல்ட்ரா அடுத்த ஆண்டும் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...