Newsபதவி விலகும் கோட்டாபய - சிங்கள ஊடகம் தகவல்

பதவி விலகும் கோட்டாபய – சிங்கள ஊடகம் தகவல்

-

பதவியை இராஜினாமா செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கள ஊடகமொன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் கடும் எதிர்ப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் பலத்த நிராகரிப்புக்கு மத்தியில் தனது ஜனாதிபதி பதவியை அவர் இராஜினாமா செய்யவுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

அதற்கான திட்டத்தை நேற்று இரவு அவர் தனக்கு நெருங்கியவர்களிடம் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, தற்போது அக்குரேகொட இராணுவத் தலைமையக முகாமில் உள்ள பதுங்கு குழியில் தங்கியுள்ள கோட்டாபய இன்று டுபாய் செல்லவுள்ளார்.

டுபாயில் இருந்து தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 12ஆம் திகதி அறிவிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது.

எனினும் அதற்கு பிறகு என்ன செய்யவுள்ளார் என்பது தொடர்பான தகவல்களை அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதன் பின்னர், தற்போதைய பிரதமர் இரண்டு வார காலத்திற்கு பதில் ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படுவார்.

அதன் போது நிரந்தர நபர் ஒருவரை தற்காலிக ஜனாதிபதி பதவிக்கு நாடாளுமன்றம் நியமிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...