Newsபதவி விலகும் கோட்டாபய - சிங்கள ஊடகம் தகவல்

பதவி விலகும் கோட்டாபய – சிங்கள ஊடகம் தகவல்

-

பதவியை இராஜினாமா செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கள ஊடகமொன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் கடும் எதிர்ப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் பலத்த நிராகரிப்புக்கு மத்தியில் தனது ஜனாதிபதி பதவியை அவர் இராஜினாமா செய்யவுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

அதற்கான திட்டத்தை நேற்று இரவு அவர் தனக்கு நெருங்கியவர்களிடம் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, தற்போது அக்குரேகொட இராணுவத் தலைமையக முகாமில் உள்ள பதுங்கு குழியில் தங்கியுள்ள கோட்டாபய இன்று டுபாய் செல்லவுள்ளார்.

டுபாயில் இருந்து தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 12ஆம் திகதி அறிவிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது.

எனினும் அதற்கு பிறகு என்ன செய்யவுள்ளார் என்பது தொடர்பான தகவல்களை அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதன் பின்னர், தற்போதைய பிரதமர் இரண்டு வார காலத்திற்கு பதில் ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படுவார்.

அதன் போது நிரந்தர நபர் ஒருவரை தற்காலிக ஜனாதிபதி பதவிக்கு நாடாளுமன்றம் நியமிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய AI தொழில்நுட்பம்

செய்யறிவு தொழில்நுட்பங்கள் தற்போது அதிக வளர்ச்சியைக் கண்டு, பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தனது...

2024 இல் ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டத்தை மீறுபவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

ஆன்லைன் விளம்பரங்களில் ஃபேஷன் நட்சத்திரங்களைச் சித்தரிப்பதால் நுகர்வோர் தவறாக வழிநடத்தப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் ஃபேஷன் நட்சத்திரங்களின் 118 சமூக ஊடக கணக்குகளை...

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்று...

பணவீக்கத்திற்கு முதன்மைக் காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகப்படியான செலவுதான்

மத்திய அரசு - மாநில மற்றும் உள்ளூர் அரசுகளின் அதிகப்படியான செலவுகள் நாட்டின் பணவீக்கத்தை நேரடியாகப் பாதித்துள்ளதாக முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கோவிட்...

மத்திய அரசுக்கும் விக்டோரியா அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் – பல தேசிய பூங்காக்கள் ஆபத்தில்

முர்ரே-டார்லிங் பேசின் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும் விக்டோரியா மாநில அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் பல தேசிய பூங்காக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன. விக்டோரியா மாநிலத்தின் உயிரியல்...

பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி ஆதரவு சேவை

குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பியவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் நிவாரணம் வழங்க புதிய ஆலோசனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் கடினமான பகுதிகளில் வசிக்கும்...