Newsமீண்டும் முதலிடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்

மீண்டும் முதலிடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்

-

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சந்தையில் அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 2.87 ட்ரில்லியன் டொலர்களாகும். முன்னதாக 2018 மற்றும் 2021 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதே போன்று உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற நிலையை எட்டியமை குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூடிங் பிரிவான அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததே அந்தஸ்த்து அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அமேசான் வெப் சேவைகளுக்கு கடும் போட்டியாளரான அஸ்யூர் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

கிளவுட் கம்ப்யூடிங் பிரிவில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், இதன் சந்தை மதிப்பு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது. இதேபோன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தும் போது மைக்ரோசாப்ட்-இன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி தமிழன்

Latest news

ஆபத்தில் உள்ள மருந்துத் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நிதித் தகவல்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து விநியோகஸ்தர்களில் ஒன்றான DBG Health, சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு சுமார் $2 பில்லியன் வருவாய் ஈட்டும் நிறுவனம், அதன்...

காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்

காசா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுடன் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக பாலஸ்தீன ஆயுதக் குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எகிப்து மற்றும் கத்தார் சமர்ப்பித்த...

6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் விசா ரத்து

அமெரிக்க சட்டத்தை மீறியதாலும், அதிக காலம் நாட்டில் தங்கியிருப்பதாலும் 6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

ஆஸ்திரேலிய இணைய நிறுவனத்தில் மில்லியன் கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அம்பலம்

சைபர் தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான iiNet வாடிக்கையாளர்களின் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. 280,000 வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதை iiNet உறுதிப்படுத்தியுள்ளது. 16 ஆம் திகதி, தெரியாத மூன்றாம் தரப்பு நிறுவனத்தின்...

ஆஸ்திரேலிய இணைய நிறுவனத்தில் மில்லியன் கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அம்பலம்

சைபர் தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான iiNet வாடிக்கையாளர்களின் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. 280,000 வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதை iiNet உறுதிப்படுத்தியுள்ளது. 16 ஆம் திகதி, தெரியாத மூன்றாம் தரப்பு நிறுவனத்தின்...

அமெரிக்காவிலிருந்து தன் மலக்கழிவுகளையும் ரஷ்யாவுக்கு எடுத்துச் சென்ற புடின்

ரஷ்யா, யுக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் அலஸ்கா நகரில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சந்திப்பு சமீபத்தில்...