Newsஅதிரடி உத்தரவுகளை பிறப்பித்த பதில் ஜனாதிபதி ரணில்!

அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த பதில் ஜனாதிபதி ரணில்!

-

ஜனாதிபதியை குறிப்பிடும் போது அதிமேதகு’ என்ற விளிப்பு பயன்படுத்தப்படுவதை உத்தியோகபூர்வமாக தடை செய்வதாக பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி கொடியையும் இரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், விடுத்த விசேட அறிவிப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உடனடியாக நியமிக்கப்படவுள்ள புதிய ஜனாதிபதிக்கு, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தேவையான பின்னணியை இந்த சில நாட்களில் செய்து தரப்படும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பதில் ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் 2 விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், அதற்கமைவாக ஜனாதிபதி பயன்படுத்திய ‘அதிமேதகு’ என்ற பதத்திற்கு உத்தியோகபூர்வமாக தடை விதித்து ஜனாதிபதி கொடியை இரத்துச் செய்வதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில், நாட்டையும் மக்களையும் மனதில் கொண்டே இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

முதலில் நாட்டை கட்டியெழுப்புவோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீள்வோம். அதன் பிறகு கட்சி அரசியலுக்கு திரும்பலாம்.

ஜனநாயகப் போராட்டங்களை நான் எப்போதும் மதிக்கிறேன். எனினும், போராடுபவர்களும் கிளர்ச்சியாளர்களும் வேறுவேறானவர்கள்.

இந்த இரண்டு பகுதிகளும் நம் நாட்டில் உள்ளன. போராட்டகாரர்கள் தங்கள் செயல்பாடுகளை அமைதியாக தொடரலாம். ஆனால் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

அண்மையில் இரண்டு ராணுவ வீரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 24 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இப்போதும் இந்தக் கிளர்ச்சியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெற உள்ள புதிய ஜனாதிபதி தெரிவில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பையும் பேண, பதில் ஜனாதிபதி என்ற வகையில் நடவடிக்கை எடுப்பேன்.

நான் எப்போதும் ஜனநாயக ரீதியில் செயற்படுகிறேன். அரசியலமைப்பின்படி செயல்படும் நான் அதற்கு புறம்பாக ஒருபோதும் செயல்படமாட்டேன்.

நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உணவு, எரிபொருள், எரிவாயு, மின்சாரம் வழங்குவது கடினம்.

எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம் என்றார்.

Latest news

FOGO DUSTUBIN பற்றி ஆஸ்திரேலியர்கள் தெரிவித்த கருத்துக்கள்

ஆஸ்திரேலிய நகராட்சிகளில் கழிவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் FOGO குப்பைத் தொட்டிகளின் அறிமுகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இது குறித்து பொதுமக்களிடையே கலவையான எதிர்வினைகள் இருப்பதாகத் தெரிகிறது....

பிறப்புகளை அதிகரிக்க அரசாங்கத்திடமிருந்து $5,000 போனஸ்

நாடு முழுவதும் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்திற்கு தீர்வாக, குழந்தை போனஸை மீண்டும் வழங்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, புதிய பெற்றோருக்குப் பிறக்கும் ஒவ்வொரு...

NSW வெள்ளத்தில் காணாமல் போன பெண்ணும் காரும்

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண் தனது காருடன் காணாமல் போயுள்ளார். மாநிலம் தற்போது பலத்த மழையை அனுபவித்து வருகிறது. நேற்று...

பார்வையற்றவர்களுக்கு நாடு தழுவிய ரீதியில் Uber சலுகைகள்

பார்வையற்றோர் அல்லது பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கான டாக்ஸி மானியத் திட்டங்களில் Uber சேவைகளைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. மாநில அரசுகள், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு டாக்ஸி சேவைகளுக்கான...

உலகின் வயதான கருவில் பிறந்த குழந்தை பதிவு

உலகின் பழமையான கருவில் இருந்து பிறந்த குழந்தை அமெரிக்காவிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 26, 2025 அன்று பிறந்த அந்தக் குழந்தைக்கு Thaddeus Daniel Pierce என்று பெயரிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட...

பிரசவத்திற்கு முன்பு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த ஆஸ்திரேலிய தாய்

பெர்த்தைச் சேர்ந்த 34 வயது கர்ப்பிணித் தாயான Kezia Summers, தனது குழந்தை பிறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் நடத்திய இரத்தப்...