Melbourneமெல்போர்ன் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் கைது

மெல்போர்ன் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் கைது

-

மெல்போர்ன் மற்றும் பல்லாரத்தில் தீ வைப்பில் ஈடுபட்ட இரண்டு சிறுமிகள் உட்பட நான்கு வாலிபர்களை விக்டோரியா காவல்துறை கைது செய்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய மூவரையும் சிறுவர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்பிரிங்வேல் பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு சிறுவர்களும் இரண்டு சிறுமிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வோங்கா பூங்காவில் நடந்த மோசமான கொள்ளை, பல்லாரத்தில் உள்ள புகையிலை கடையில் தீவைப்பு மற்றும் மில் பார்க் உணவகத்தில் இரண்டு தீ தாக்குதல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் மற்றும் தீயினால் கிரிமினல் சேதம், உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்துதல், காரைத் திருடுதல் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...