கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் குடும்பத்தின் தாய் மற்றும் பிள்ளைகள் அடங்குவதாகவும் தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி பிபிசி உலகச் சேவை, இறந்தவர்கள் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது.
உயிரிழந்த 6 பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும், உயிரிழந்த இளைய குழந்தைக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குடும்பத்துடன் வசித்து வந்த 19 வயதுடைய இலங்கை மாணவன் ஒருவரே கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில் 35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க மற்றும் அவரது நான்கு பிள்ளைகளான 7 வயதான இனுகா விக்ரமசிங்க, 4 வயதான அஷ்வினி விக்ரமசிங்க, 2 வயதான ரின்யான விக்கிரமசிங்க மற்றும் இரண்டு மாத குழந்தை கெல்லி விக்ரமசிங்க ஆகியோர் அடங்குவர்.
உயிரிழந்த ஆறாவது நபர் 40 வயதான காமினி அமரகோன் என்பதுடன், அவர் அதே வீட்டில் வசித்த குடும்பத்தின் உறவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் காணப்பட்ட பொலிசார், அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் ஒட்டாவாவின் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய கொலையாகும், இது ஒரு உண்மையான சோகம், இது கனடாவின் தலைநகரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒட்டாவாவின் மேயர் கூறினார்.
நகரத்தின் வரலாற்றில் நடந்த வன்முறைச் செயல்களில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு கொலை என்று அவர் விவரித்தார்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.