Breaking Newsபிரதமரின் அலுவலகத்தில் ஆவணங்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

பிரதமரின் அலுவலகத்தில் ஆவணங்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

-

அனைத்துலக நாணய பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பான ஆவணங்களை சிறிலங்கா பிரதமரின் அலுவலகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பான பல ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் பிரதமராகவும் தற்போது பதில் அரச தலைவராகவும் உள்ள ரணில் விக்கிரமசிங்க அனைத்துலக நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்திய போதிலும் அவர்கள் அனைவரின் பதிவுகளையும் பிரதமர் செயலகம் வைத்திருந்தது.

ஆனால், போராட்டக்காரர்கள் அலுவலகத்தை கைப்பற்றிய பிறகு கோப்புக்கள் காணாமல் போனதாக பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கோப்புக்களில் சிறிலங்காவுக்கு தேவையான உதவிகளை பெறுவது தொடர்பாக பல முக்கிய தகவல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.

Latest news

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸின் Albay மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு...

எடை இழப்பு மருந்துகளை நிறுத்திய பிறகு என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்ட எடை இழப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்த புதிய ஆய்வை பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்திய...

வட கரோலினாவில் பிரபல நீச்சல் தலத்திற்கு அருகில் மிகப்பெரிய முதலை கண்டுபிடிப்பு

மழைக்காலத்தின் உச்சத்தில் வடக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான நீச்சல் இடத்திற்கு அருகில் 4.9 மீட்டர் உயரமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. டார்வினுக்கு தெற்கே சுமார் 150...

வார இறுதி வெப்ப அலைக்கு தயாராகுமாறு NSW குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸில் உள்ள குடியிருப்பாளர்கள் வார இறுதி வரை நீடிக்கும் வெப்ப அலைக்கு தயாராக இருக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். இன்று சிட்னியில் வெப்பநிலை...

புதிய ஒலிம்பிக் மைதானத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

பிரிஸ்பேர்ண் வடக்கில் உள்ள விக்டோரியா பூங்காவில் 2032 ஒலிம்பிக்கிற்காக ஒரு புதிய மைதானத்தை கட்டும் அரசாங்கத்தின் முடிவைச் சுற்றி தற்போது ஒரு நெருக்கடி சூழ்நிலை உள்ளது. அரசாங்கத்தால்...