TikTok மொபைல் செயலியில் உள்ள தரவுகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றில் கென்யாவிற்கு சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி, TikTok அப்ளிகேஷனில் கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்ட சமீபத்திய நாடாக கென்யா மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கென்யாவின் உயர் அதிகாரிகள் சீன நிறுவனமான ByteDance தங்கள் நாட்டின் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்களில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, கென்யாவில் TikTok அப்ளிகேஷன்களுக்கு தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், கென்யா அதிகாரிகள் அதை பரிசீலித்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தரவு தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் அமெரிக்காவில் கூட TikTok தடை குறித்து தற்போது பேசப்படுகிறது.
மேலும், செனகல் மற்றும் சோமாலியாவில் டிக்டாக் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.